கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட சென்னை – அந்தமான் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்..!

Read Time:1 Minute, 24 Second
Page Visited: 151
கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட சென்னை – அந்தமான் பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்..!

ஊரடங்கால் சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து, தமிழக அரசு அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் மற்றும் அந்தமான் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில், பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதனால் 53 நாட்களுக்குப் பிறகு சென்னை – அந்தமான் இடையே முதல் கப்பல் போக்குவரத்து நேற்று முன்தினம் தொடங்கியது.

இதன் முதல்கட்டமாக எம்.வி. நிக்கோபார் என்ற கப்பலில் 87 பயணிகள் சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, துறைமுகத்தில் பயணிகள் அனைவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது மேலும், அவர்களது உடமைகளும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %