வரலாற்றுப் பயணம்… 19 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்த வீரர்கள்…! முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை விண்ணிக்கு அனுப்பி சாதனை…

Read Time:4 Minute, 6 Second
Page Visited: 97
வரலாற்றுப் பயணம்… 19 மணிநேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்த வீரர்கள்…!  முதல்முறையாக தனியார் நிறுவனம் மனிதர்களை விண்ணிக்கு அனுப்பி சாதனை…

எலான் மஸ்க்கின் “ஸ்பேஸ் எக்ஸ்” என்ற தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் பால்கான் ராக்கெட் 19 மணிநேர பயணத்துக்குப்பின் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று (மே 31) அடைந்தது. இரு அமெரிக்க விண்வெளி வீரர்களான பாப் பெக்கென்(49), டாக் ஹர்லி(53)இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாசா விண்வெளி நிலையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவில் கேப் கெனரவலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களை சுமந்துகொண்டு சனிக்கிழமை பிற்பகல் 3.22 மணிக்கு டிராகன் ஃபால்கான் ராக்கெட் விண்ணிற்கு ஏவப்பட்டது. ஃபால்கான் ராக்கெட் ஏறக்குறைய 19 மணிநேரப் பயணத்துக்குப்பின் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

அதில் பயணித்த இரு அமெரிக்க விண்வெளி வீரர்களான பெக்கென், ஹர்லி இருவரும் விண்வெளி நிலையத்துக்குள் தங்கள் வருகையை பதிவு செய்தனர்.

இதுகுறித்து நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மனித வரலாற்றில் முதல்முறையாக நாசா விண்வெளி வீரர்கள் தனியார் நிறுவனம் வர்த்தக ரீதியாக தயாரித்த ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்து இருக்கிறார்கள். பெக்கென், ஹார்லி இருவரும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் ராக்கெட் மூலம் எங்களை அடைந்து உள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்” எனக் தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனமும் இரு விண்வெளி வீரர்களும் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துவி்ட்டார்கள் என்பதை உறுதி செய்துள்ளது

முதல் முறையாக தனியார் நிறுவனம் ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணிக்கு அனுப்பி வரலாறு படைத்து இருக்கிறது. விண்வெளிக்கு இதுநாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியது கிடையாது. வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது.

இதற்கு முன்னதாக மனிதர்களை விண்ணுக்கு அமெரி்க்கா, ரஷ்யா, சீனா அரசுள் மட்டுமே அனுப்பி இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் ஸ்பேக்ஸ்-எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அமெரிக்க மண்ணிலிருந்து எந்த ராக்கெட்டையும் அனுப்பவில்லை. ஏறக்குறைய 10ஆண்டுக்குப்பின் அமெரி்க்க மண்ணிலிருந்து இரு அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் நாசாவுக்கு முதல் முறையாக ஸ்பேக்-எக்ஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %