அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி..! பரிசோதனை முடிவுகள் இன்று இரவு வெளியாகலாம்.!

Read Time:1 Minute, 35 Second
Page Visited: 159
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி..! பரிசோதனை முடிவுகள் இன்று இரவு வெளியாகலாம்.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு இன்று பரிசோதனை நடத்தப்பட்டது.

கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல், இருமல்

கெஜ்ரிவாலுக்கு 7-ந் தேதி பிற்பகல் முதல் இருமலும், காய்ச்சலுக்கான அறிகுறியும் இருந்து வருகிறது. இதனால் டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். அவருக்கு 9-ந் தேதி (இன்று) கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை காலை அறிவிக்கப்படும்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தனது டுவிட்டர் பதிவில்

கெஜ்ரிவால் சர்க்கரை நோயாளி என்றும் அவர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என சஞ்சய் சிங் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா அறிகுறி காணப்பட்டதை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு பிறகு கெஜ்ரிவால் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %