அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் பரவல் ‘மிகவும் அரிதானது’.. ஆபத்து குறைவு…! உலக சுகாதார நிறுவனம் ஆய்வு (ஆறுதல்) தகவல்!

Read Time:4 Minute, 8 Second
Page Visited: 134
அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றால் பரவல் ‘மிகவும் அரிதானது’.. ஆபத்து குறைவு…! உலக சுகாதார நிறுவனம் ஆய்வு (ஆறுதல்) தகவல்!

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை மோசம் அடைந்து வரும் இந்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், இப்போது கொரோனா பரவலில் 75 சதவீதம், அமெரிக்கா மற்றும் ஆசியாவின் 10 நாடுகளில் இருந்துதான் வருகிறது என்ற தகவலை வெளியிட்டார்.

இச்சந்திப்பில் கொரோனா விவகாரத்தில் இந்தியாவுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம் பொதுவாக கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், உடல் தளர்ச்சி, உடல் வலி, தொண்டை வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாசனை மற்றும் சுவை அறியாமை என பட்டியல் நீண்டு செல்கிறது. இருப்பினும் சமீப காலமாக ‘அறிகுறிகளற்ற கொரோனா’ பாதிப்பு பலருக்கும் இருக்கிறது.

இந்த அறிகுறிகளற்ற கொரோனாவால் மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது.. ஆபத்து குறைவு என உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் மரியாவான் கெர்கோவ் தெரிவித்து இருக்கிறார்.

மரியாவான் கெர்கோவ் இதுதொடர்பாக பேசுகையில், எங்களிடம் உள்ள தரவுகள், ஒரு அறிகுறியற்ற கொரோனா தொற்றுள்ள நபர், மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்புகிறார் என்பது மிகவும் அரிதானது. இப்படி அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகிற நபர்கள், தொடர்பு தடம் அறிதல் மூலம் அடையாளம் காணப்படுகிறார்கள்.

இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதில்லை என்பது தொடர்பு தடம் அறிந்த நாடுகளின் தரவுகளில் இருந்து தெரிய வந்திருக்கிறது. இதெல்லாம் மருத்துவ இதழ்களில் இனி தான் வெளியாக வேண்டியதிருக்கிறது. இந்த தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் மறு ஆய்வு செய்து வருகிறது. இத்தகைய கண்டுபிடிப்புகள், சிங்கப்பூரில் ஒரு ஆய்வறிக்கையில் வெளியாகியும் உள்ளது என தெரிவித்து உள்ளார்.

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிற நபர்கள் பயன்படுத்துகிற டூத்பிரஷ், மக்கு (குவளை), முக கவசம், டவல் போன்ற தனிப்பட்ட உடைமைகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் 300 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த 1,174 பேரை பரிசோதனை செய்ததில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று தாக்கம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. இதெல்லாம் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகிறவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா எளிதாக பரவாது என்பதற்கு ஆதாரமாக அமைந்து உள்ளது.

இந்தியாவில் இப்போது பரவலாக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று இருக்கிறது என்பது ஆறுதல்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %