சீனாவில் கொரோனா 2019 ஆகஸ்டிலேயே பரவ தொடங்கி விட்டது…! அதிர்ச்சி தகவல்…!

Read Time:4 Minute, 21 Second
Page Visited: 155
சீனாவில் கொரோனா 2019 ஆகஸ்டிலேயே பரவ தொடங்கி விட்டது…! அதிர்ச்சி தகவல்…!

கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் இறுதியில் முதன்முதலாக வெளிப்பட்டதாக தகவல்கள் வெளியாகினர் ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது.

இவ்விவகாரத்தில் அனைத்து உண்மையான தகவல்களையும் வெளியிடாமல் சீனா மறைத்து விட்டது என்பது தான் இன்னும் அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது. சீனா சமீபத்தில் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் கூட எப்போது பரவ தொடங்கியது என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை. இந்நிலையில் ஆகஸ்டு மாதமே அங்கு வைரஸ் பரவத்தொடங்கி விட்டது என ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது.

செயற்கைக்கோள் படங்களை ஆதாரமாக கொண்டும், இணையதள தேடல்களை அடிப்படையாக கொண்டும்தான் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி தனது ஆய்வின் முடிவை தெரிவிக்கிறது. செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் உகானில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கார்களின் இயக்கத்தை ஹார்வர்டு மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து இருக்கிறார்கள்.

உகான் மருத்துவமனைகளில் செப்டம்பர் மத்தியில் தொடங்கி அக்டோபர் மத்தி வரையில், வியக்கத்தக்க அளவுக்கு கார்கள் அங்கு குவிந்திருந்ததை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் புரவுன்ஸ்டீன் பேசுகையில் “ கோடைக் காலத்தின் பிற்பகுதியிலும், இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் தொடங்கி உகானில் உள்ள 5 பெரிய மருத்துவமனைகளில் வந்த கார்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவில் அதிகரித்து இருந்ததை நாங்கள் கண்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி மருத்துவமனைகளில் கார்கள் குவிவது, ஒரு வித தொற்றுநோய் அதிகளவில் பரவுகிற போது தான் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட சொல்கிறார்கள். இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஏறக்குறைய 350 செயற்கை கோள் படங்களில் பயன்படுத்தத்தக்க 108 படங்களை ஆராய்ச்சியாளர்கள் உகான் மருத்துவமனைகளையும், சுற்றுப்புற சாலைகளையும் ஆராய பயன்படுத்தி உள்ளனர்.

அதில் 2019 செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில்தான் கார்கள் நோயாளிகளுடன் மிக அதிக எண்ணிக்கையில் வந்து சென்று உள்ளன. இன்னொரு முக்கிய அம்சம் 2019 செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இடையே உகான் மருத்துவமனைகளில் கார்களின் எண்ணிக்கை அதிகரித்த சமயத்தில், சீனாவின் தேடல் இணையதளமான ‘பைடு’ இணைய தளத்தில் அதிகமாக இருமல், வயிற்றுப்போக்கு போன்ற வார்த்தைகளை குறிப்பிட்டு தேடி உள்ளனர்.

இதெல்லாம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் தொடங்கியது கடந்த டிசம்பரில் அல்ல, அதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்பதுதான் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %