சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ‘மத்திய குழு’ வருகிறது..!

Read Time:1 Minute, 33 Second

இந்தியாவிலேயே மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பை நகரில் தான் அதிகபட்சமாக 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்குகிறது.

எனவே இந்த நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுவதற்காக மத்திய அரசு குழுக்களை அமைத்து உள்ளது. இந்த மத்திய குழுக்களில் ஒன்று ஒரு வாரத்துக்குள் சென்னை வர இருக்கிறது.

இந்த குழுவினர் கொரோனா நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதார அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவார்கள்.

இதுபோல் டெல்லி, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, பெங்களூரு நகரங்களுக்கும் சென்று நிலைமையை ஆராய்ந்து அந்தந்த மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.