இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாகியதுடன், 396 பேரின் உயிரையும் கெ கொரோனா பறித்துள்ளது.
இதனால் நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 8,498 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் கொரோனா 357 பேரை உயிரிழக்க செய்ததுடன், 9,997 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலங்களில் புதிதாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், நோயில் இருந்து குணமடைந்தவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு தகவல் வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் மராட்டியம், தமிழகம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன. மராட்டிய மாநிலத்தில் புதிதாக 152 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இந்தியா முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 396 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8,498 ஆக உயர்ந்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. கொரோனா வைரசால் அதிக பாதிப்பை சந்தித்து வரும் மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்து உள்ளது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. 34,687 பேர் பாதிக்கப்பட்டுள்ள தலைநகர் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது.
புதிதாக பாதிப்புக்கு உள்ளான 10,965 பேருடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. இதில் 141,842 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 38
ஆந்திரா – 5,429
அருணாச்சல் பிரதேசம் – 61
அசாம் – 3,319
பீகார் – 5,913
சண்டிகார் – 332
சத்தீஷ்கர் – 1,398
தாதர் நகர் ஹவேலி மற்றும் தமன் & டியு – 30
டெல்லி – 34,687
கோவா – 417
குஜராத் – 22,032
அரியானா – 5,968
இமாச்சலப் பிரதேசம் – 470
ஜம்மு-காஷ்மீர் – 4,574
ஜார்க்கண்ட் – 1,599
கர்நாடகா – 6,245
கேரளா – 2,244
லடாக் – 135
மத்தியப் பிரதேசம் – 10,241
மகாராஷ்டிரா – 97,648
மணிப்பூர் – 366
மேகாலயா – 44
மிசோரம் – 102
நாகாலாந்து – 128
ஒடிசா – 3,386
புதுச்சேரி – 157
பஞ்சாப் – 2,887
ராஜஸ்தான் – 11,838
சிக்கிம் – 14
தமிழ்நாடு – 38,716
தெலுங்கானா – 4,320
திரிபுரா – 913
உத்தரகண்ட் – 1,643
உத்தரபிரதேசம் – 12,088
மேற்கு வங்காளம் – 9,768
வேர்ல்டோ மீட்டர் அமைப்பின் கொரோனா வைரஸ் பாதிப்பு கணக்கின்படி, உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 5-வது இடத்திலிருந்த இந்தியா, பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 4-வது இடத்துக்கு நகர்ந்தது.