சென்னையில் அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்..! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

Read Time:2 Minute, 56 Second
Page Visited: 284
சென்னையில் அடுத்த 2 வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்..! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

சென்னையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது அடுத்த 2 வாரங்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என புதிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை பெற்று வந்த 130 நபர்களில் 30 பேர் பூரண குணமடைந்தனர். அவர்களை சுகாதாரத்துறை செயலாளரும், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியுமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தார்.

அப்போது பேசிய அவர், அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிமுறைகளை பின்பற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

சென்னையில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில், தற்போது 5 ஆயிரத்து 210 தெருக்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. தேனாம்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய சவாலான மண்டலங்களில் மக்கள் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்காக கூடுதலாக 50 ஆம்புலன்சு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்ததன் மூலம் அடுத்த 2 வாரங்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். இதன் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க முடியும். கொரோனா மையங்களில் 17 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. மருத்துவமனைகளிலும் படுக்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஒருவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டாலே முடிவு வரும் வரை அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதேபோல் பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லாமல் அறிகுறி இருந்தாலும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %