இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது, இது வரையில் இல்லாத பாதிப்பு….

Read Time:3 Minute, 55 Second

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவில் காலூன்ற தொடங்கிய கொரோனா, ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்தது. பின்னர் மெல்ல மெல்ல வேகமெடுக்க தொடங்கிய வைரஸ் இப்போது காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது.

இதனால் உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்திற்கு சென்றுள்ளது.

கடந்த மாதம் முழுவதும் தினந்தோறும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 4 இலக்க எண்களில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 5 இலக்கத்தை எட்டியிருக்கிறது. அதன்படி நேற்று காலை முதல் இன்று (ஜூன் 1) காலை வரையிலானா 24 மணி நேரத்தில் மட்டும் 11,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் இதில் 1,62,378 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்றால் புதிதாக 311 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,195 அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் 3-ல் ஒரு பங்கு மராட்டிய மாநிலத்தில்தான் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டும் இந்த வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,04,568 ஆக உள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,687 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,409 ஆகவும், பலி எண்ணிக்கை 397 ஆகவும் இருக்கிறது. தேசிய தலைநகர் டெல்லியில் 38,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கும் நிலையில், அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் அந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையாகும்.

மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விபரம்:-

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 38

ஆந்திரா – 5965

அருணாச்சல பிரதேசம் – 87

அசாம் – 3718

பீகார் – 6290

சண்டிகார் – 345

சத்தீஷ்கார் – 1512

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டியு – 35

டெல்லி – 38958

கோவா – 523

குஜராத் – 23038

அரியானா – 6749

இமாச்சலப் பிரதேசம் – 502

ஜம்மு-காஷ்மீர் – 4878

ஜார்க்கண்ட் – 1711

கர்நாடகா – 6824

கேரளா – 2407

லடாக் – 437

மத்தியப் பிரதேசம் – 10641

மகாராஷ்டிரா – 104568

மணிப்பூர் – 449

மேகாலயா – 44

மிசோரம் – 107

நாகாலாந்து – 163

ஒடிசா – 3723

புதுச்சேரி – 176

பஞ்சாப் – 3063

ராஜஸ்தான் – 12401

சிக்கிம் – 63

தமிழ்நாடு – 42687

தெலுங்கானா – 4737

திரிபுரா – 1046

உத்தரகண்ட் – 1785

உத்தரபிரதேசம் – 13118

மேற்கு வங்காளம் – 10698.