தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ்… புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி…

Read Time:2 Minute, 23 Second
Page Visited: 155
தமிழகத்தில் ஒரே நாளில் 38 பேரின் உயிரை பறித்த கொரோனா வைரஸ்… புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உயிரிழப்பும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 38 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்து உள்ளது. இதன் மூலம் கொரோனா கோரதாண்டவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 38 பேரின் உயிரை கொரோனா வைரஸ் பறித்து உள்ளது. இன்று பதிவான உயிரிழப்புகளில், 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

பதிவான உயிரிழப்புகளில் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 31 பேர் மற்றும் இணை நோய் அல்லாதவர்கள் 7 பேர் ஆவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 1,138 பேர் சிகிச்சையில் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தமாக, 24 ஆயிரத்து 547 பேர் வீடு திரும்பி உள்ளனர். மாநிலத்தில் 19 ஆயிரத்து 676 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,437 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %