புதிய உச்சம்..! இந்தியாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. மராட்டியத்தில் மட்டும் 1 லட்சம் தொற்று பாதிப்பு..

Read Time:4 Minute, 6 Second

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிவிட்டது பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த நோயில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1½ லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா, தொடக்கத்தில் ஆமை வேகத்தில் மெதுவாக பரவியது. பின்னர் வேகமெடுக்க தொடங்கி இப்போது காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது இடத்துக்கு சென்றுள்ளது.

கடந்த மாதம் 4 இலக்க எண்களில் இருந்த எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 5 இலக்கத்தை எட்டியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. கொரோனா தொற்றால் புதிதாக 386 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,54,329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,884 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 3-ல் ஒரு பங்கு கொரோனா பாதிப்பு மராட்டிய மாநிலத்தில் தான் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உள்ளது. இதில் 47,796 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 3,717 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,687 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 23,409 ஆகவும், பலி எண்ணிக்கை 397 ஆகவும் இருக்கிறது.

டெல்லியில் 36,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 13,398 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு பலி எண்ணிக்கை 1,214 ஆக உள்ளது.

கொரோனா அச்சத்தில் மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய ஒரே விஷயம் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தான். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதில் இருந்து குணமடைந்தவர்களின் (அடைப்புக்குறிக்குள்) எண்ணிக்கை :-

குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்கள்- 22,527 (குணமடைந்தவர்கள்-15,493), உத்தரபிரதேசம் 12,616 (7,609), ராஜஸ்தான் 12,068 (8,898), மத்தியபிரதேசம் 10,443 (7,201), மேற்குவங்காளம் 10,244 (4,206), கர்நாடகா 6,516 (3,440), அரியானா 6,334 (2,475), பீகார் 6,103 (3,587), ஆந்திரா 5,680 (3,105), ஜம்மு காஷ்மீர் 4,730 (2,086), தெலுங்கானா 4,484 (2,278), அசாம் 3,498 (1,537), ஒடிசா 3,498 (2,474), பஞ்சாப் 2,986 (2,282), கேரளா 2,322 (1,000), உத்தரகாண்ட் 1,724 (947), ஜார்கண்ட் 1,617 (672), சத்தீஸ்கார் 1,429 (550), திரிபுரா 961 (278), இமாசலபிரதேசம் 486 (297), கோவா 463 (69), மணிப்பூர் 385 (77), சண்டிகார் 334 (286), லடாக் 239 (62), புதுச்சேரி 157 (67), நாகாலாந்து 156 (49), மிசோரம் 104 (1), அருணாசலபிரதேசம் 67 (4), சிக்கிம் 63 (2), மேகாலயா 44 (22), அந்தமான் நிகோபர் தீவு 38 (33), தாதர்நகர் ஹவேலி 30 (2).

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியல்.