இந்தியாவில் 4 கட்ட ஊரடங்கு நடவடிக்கையை தொடர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 11 ஆயிரத்து 929 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு புதிய உச்சம் கண்டது. தொடர்ந்து மூன்றாவது நாளாக தொற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதித்தது.
இதன்மூலம் இந்தியாவில் மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரத்து 922 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று 11,502 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 332,424 ஆக உயர்ந்து உள்ளது. இதில் மராட்டிய மாநிலம் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 1,07,958 பேருக்கு தொற்று உள்ளது.
42 ஆயிரத்து 687 பேருக்கு தொற்று பாதித்துள்ள நிலையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. டெல்லியில் 40 ஆயிரத்துக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
நாடு முழுவதும் நேற்று 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி 307 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்து 9,520 என்ற அளவை அடைந்துள்ளது. மராட்டியத்தில் மட்டும் 3,950 பேர் உயிரிழந்து உள்ளன்ர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்து, சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பி இருப்போர் எண்ணிக்கை 1.69 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்தம் குணம் அடைந்தோர் விகிதம் 50 சதவீதத்தை தாண்டியிருக்கிறது. மொத்தம் 153,106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகம் என்பது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்து இருக்கிறது.
மாநிலம் வாரியாக பாதிப்பு விபரம்:-
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 38
ஆந்திரா – 6,163
அருணாச்சல பிரதேசம் – 91
அசாம் – 4,049
பீகார் – 6,470
சண்டிகர் – 352
சத்தீஸ்கர் – 1,662
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டியு – 36
டெல்லி – 41,182
கோவா – 564
குஜராத் – 23,544
ஹரியானா – 7,208
இமாச்சலப் பிரதேசம் – 518
ஜம்மு-காஷ்மீர் – 5,041
ஜார்க்கண்ட் – 1,745
கர்நாடகா – 7,000
கேரளா – 2,461
லடாக் – 549
மத்தியப் பிரதேசம் – 10,802
மகாராஷ்டிரா – 107,958
மணிப்பூர் – 458
மேகாலயா – 44
மிசோரம் – 112
நாகாலாந்து – 168
ஒடிசா – 3,909
புதுச்சேரி – 194
பஞ்சாப் – 3,140
ராஜஸ்தான் – 12,694
சிக்கிம் – 68
தமிழ்நாடு – 44,661
தெலுங்கானா – 4,974
திரிபுரா – 1,076
உத்தரகண்ட் – 1,819
உத்தரபிரதேசம் – 13,615
மேற்கு வங்கம் – 11,087.