லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் உள்பட 3 வீரர்கள் வீரமரணம்..! 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகம் தகவல்..

Read Time:2 Minute, 0 Second
Page Visited: 334
லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் உள்பட  3 வீரர்கள் வீரமரணம்..! 5 சீன வீரர்கள் பலியானதாக சீன ஊடகம் தகவல்..

இந்தியா – சீனா எல்லையில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது நேற்று இரவு சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 45 வயது இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரும் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 22 வருடங்களாக ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலில் சீன ராணுவத்திலும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது. இருப்பினும் இது குறித்து சீன ராணுவத்தின் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் லடாக்கில் நடைபெற்ற தாக்குதலில் சீன வீரர்கள் 5 பேர் பலியானதாகவும் மேலும் 11 சீன வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக சீன ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து சீன அரசாங்கம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-சீனா எல்லை லடாக்கில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இந்திய – சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

2 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %