‘எங்களை சீண்டினால் தக்க பதிலடியை கொடுப்போம்…’ சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!

Read Time:3 Minute, 3 Second
Page Visited: 502
‘எங்களை சீண்டினால் தக்க பதிலடியை கொடுப்போம்…’ சீனாவுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த மோதலின் போது சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரையில் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. இருதரப்பு மோதலை அடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் எல்லையில் இந்திய வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வரும் வெள்ளிக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கூட்ட அழைப்பு விடுத்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இரு நாட்கள் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், மராட்டியம், மேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று பிரதமர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா கட்டுப்பாடு ஆலோசனை தொடரபாக மாநில முதல்வர்களுடன் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் எல்லையில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களுக்கும் 2 நிமிடங்கள் பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், “கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதல் சம்பவத்தில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம் வீண்போகாது. இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், இந்தியாவை சீண்டினால், ஆத்திரமூட்டினால் எந்தஒரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் வல்லமை உடையது” என்று சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் பேசுகையில், நம் தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்தியாவை பொறுத்தவரை தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானது. இந்தியா எப்போதும் பிரச்சினைக்குள் செல்ல முயற்சிக்காது, வேறுபாடுகளை களையவே முயற்சிக்கும்” என தெரிவித்தார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %