‘டிக்டாக்’ உள்பட 52 சீனா மொபைல் செயலிகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்க இந்திய உளவுத்துறை பரிந்துரை…. செயலிகளின் முழுமையான பட்டியல்:-

Read Time:2 Minute, 57 Second
Page Visited: 1157
‘டிக்டாக்’ உள்பட 52 சீனா மொபைல் செயலிகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்க இந்திய உளவுத்துறை பரிந்துரை…. செயலிகளின் முழுமையான பட்டியல்:-

சீனாவுடன் தொடர்புடைய 52 மொபைல் செயலிகளை பயன்படுத்துவதை தடுப்பதற்கான பரிந்துரையை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆதரித்துள்ளது.

பாதுகாப்பு இல்லாத சீனாவுடன் தொடர்புடைய 52 மொபைல் செயலிகளை மக்கள் பயன்படுத்துவதை தடுக்க அல்லது அதற்கு அறிவுறுத்துமாறு இந்திய புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டு உள்ளது. இந்தியாவுக்கு வெளியே ஒரு பெரிய அளவிலான தகவல் தரவை பெறுவதற்கு இவை உதவுகின்றன என இவ்விவகாரம் தொடர்பாக நன்கு தகவல் அறிந்தவர்கள், அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்த செயலிகளின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கலாம் என மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பியிருக்கும் பட்டியலில், வீடியோ கான்பரன்சிங் வசதிக்கொண்ட ஜூம் செயலி மற்றும் குறுகிய வீடியோ பயன்பாடு கொண்ட டிக்டாக் செயலிகளும் இடம்பெற்று உள்ளது. 52 செயலிகளை தடை செய்யலாம் என புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட பரிந்துரையை சமீபத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆதரித்து உள்ளது என மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இச்செயலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்று புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.

“பரிந்துரைகள் பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன,” என்று ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்., ஒவ்வொரு மொபைல் செயலி பயன்பாட்டிலும் இருக்கும் அபாயங்கள் ஒவ்வொன்றாக ஆராயப்பட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

இந்திய உளவுத்துறையின் ரேடாரில் (கண்காணிப்பில்) உள்ள செயலிகள் விபரம்:-

 • TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo
 • WeChat, SHAREit, UC News, UC Browser
 • BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE
 • Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder
 • APUS Browser, VivaVideo- QU Video Inc
 • Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab)
 • Mi Community, DU recorder, YouCam Makeup
 • Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser
 • DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah
 • CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map
 • Wonder Camera, ES File Explorer, QQ International
 • QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music
 • QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings
 • Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space
0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %