இந்தியா – சீனா எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு! முப்படைகளும் உஷார்..

Read Time:2 Minute, 37 Second
Page Visited: 583
இந்தியா – சீனா எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு! முப்படைகளும் உஷார்..

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவு இந்தியா-சீனா படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேரும் சீனா தரப்பிலும் 35 பேரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா, சீனா இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடந்துள்ள மிகப்பெரிய மோதலால் எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. போர் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் தொடர்ந்து தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதேநேரம் எல்லையில் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்க இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் படைகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.

முப்படைகளும் உஷார்

முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அத்துடன் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்காக லடாக், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பதற்றம் நிறைந்த எல்லைப்பகுதிகளில் கூடுதல் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் படைகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக மோதல் நடைபெற்ற லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவுடனான எல்லைப்பகுதிகளை விழிப்புடன் கண்காணிக்குமாறு முன்வரிசை விமானப்படை தளங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் உலவும் என்பதால் கடற்படையும் உஷார்படுத்தப்பட்டு ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %