‘எம். எஸ். தோனி’ 2-ம் பாகம்.. சுஷாந்த் சிங் மறைவால் கைவிடப்பட்டது..!

Read Time:2 Minute, 46 Second
Page Visited: 328
‘எம். எஸ். தோனி’ 2-ம் பாகம்.. சுஷாந்த் சிங் மறைவால் கைவிடப்பட்டது..!

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சுயசரிதை படமான ‘எம். எஸ். தோனி.. த அன்ட் டோல்டு ஸ்டோரி’ 2016-ல் வெளியானது. இப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானதால் கடந்த ஞாயிறன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மறைவு ஹிந்தி திரையுலகினரை மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுஷாந்த் சிங் 11 படங்களில் நடித்து இருந்தாலும் எம். எஸ். தோனி அவருக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. தோனி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன. அந்த படத்துக்காக தோனியுடன் அதிக நாட்கள் செலவிட்டு அவரது உடல்மொழிகளையும் கிரிக்கெட் விளையாடும் விதத்தையும் கற்றறிந்தார். மேலும் தோனியின் கிரிக்கெட் வீடியோக்களையும், கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி எடுத்தார். அவரது கடும் உழைப்பு தோனி கதாபாத்திரமாகவே மாற வைத்து இருந்தது என புகழப்பட்டார்.

இவ்வாறு இருக்க, சுஷாந்த் சிங் வைத்து தோனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டப்பணியில் படக்குழுவினர் இருந்ததாகவும் சுஷாந்த் சிங் மறைவால் அந்த முயற்சியை தற்போது கைவிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தோனி படத்தின் இணை தயாரிப்பாளர் அருண் பாண்டே, “தோனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு இருந்தோம். தற்போது அந்த முயற்சியை கைவிட முடிவு செய்துள்ளோம். சுஷாந்த் சிங் இல்லாமல் தோனி 2-ம் பாகத்தை எடுக்க முடியாது. தோனி 2-ம் பாகம் உருவாக்கியிருந்தால் அதுவும் வெற்றி படமாக அமைந்து இருக்கும். இனி மேல் அந்த வாய்ப்பு இல்லை” என்று தனது வருத்தத்துடன் இதனை தெரிவித்தார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %