கல்வான் (கொள்ளைக்காரன்) பள்ளத்தாக்கின் பின்னணியும் அதன் வரலாறும்..

Read Time:5 Minute, 37 Second

கடந்த திங்களன்று இரவு லடாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் சண்டையிட்ட இடம் தான் கல்வான் பள்ளத்தாக்கு. அங்கு ஓடும் அழகான கல்வான் ஆற்றின் பெயரை கொண்டு தான் இந்த பகுதி அழைக்கப்படுகிறது. கல்வான் ஆறு காரகோரம் மலைத்தொடரில் தொடங்கி 80 கிலோமீட்டர் பயணித்து அக்சய் சின் வழியாக கிழக்கு லடாக் பகுதியில் சென்று ஷியோக் நதியில் சங்கமிக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கு 1962-ஆம் ஆண்டு இந்திய சீன போரின் போதும் முக்கிய புள்ளியாக இருந்து உள்ளது. இந்த பகுதி இந்தியா-சீனா இடையே வரையறுக்கப்படாத எல்லை கோட்டில் உள்ளது. கடந்த 1950-ம் ஆண்டு வரை சீனா, கல்வான் ஆறு வரை தனது நாட்டின் எல்லை இருப்பதாக சொல்லி வந்தது.

ஆனால் 1956-ம் ஆண்டு முதல் கல்வான் ஆறும், அதனை ஒட்டியுள்ள மலைப்பகுதியும் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை கல்வான் ஆறு மற்றும் சீனா வசப்படுத்தி உள்ள அக்சய் சின் பகுதி முழுவதும் தனக்கே சொந்தம் என்று கூறி வருகிறது. அக்சய்சின் பகுதி தற்போது சீனா வசம் இருந்தாலும், அது இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள கல்வான் ஆற்றை முதன் முதலில் 1892-ம் ஆண்டு கண்டறிந்தவர் குலாம் ரசூல் கல்வான். லடாக் பகுதியை சேர்ந்த அவர், ஒரு கடினமான சாகசக்காரர் மற்றும் ஆய்வாளர். 19-ம் நூற்றாண்டுகளில் ரஷ்யா மற்றும் இங்கிலாந்து மலையேற்ற குழுவினர் மற்றும் சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு அங்குள்ள மலைகளில் ஏறி இறங்குவார். அந்த சமயத்தில் தான் அவர் இந்த ஆற்றை முதலில் கண்டுபிடித்தார்.

பொதுவாக ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டால் ஆங்கிலேயர்கள் பெயர்கள் தான் கொடுக்கப்படும் ஆனால் ஒரு புவியியல் இடத்துக்கு உள்ளூர் ஆய்வாளர் பெயர் பெற்றது.

ஆம் டன்மோர், தலைமையான ஒரு இங்கிலாந்து மலையேற்ற குழுவினரு உயரமான மலைகள் மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகளின் சிக்கிருந்த போது அந்த சிறுவன் பள்ளத்தாக்குகள் வழியாக ஒப்பீட்டளவில் எளிதான வழியைக் கண்டுபிடித்தார், இது பயணத்திற்கு அதிக சிரமமோ அல்லது விபத்துகளோ இல்லாமல் முன்னேற உதவியது.

இதனால் ஆச்சரியம் அடைந்த குழுவின் தலைவர் டன்மோர் புதிதாக வந்த பாதைக்கு கர்ஜிக்கும் நீரின் விளிம்பில் ஆற்றுக்கு “கல்வான் நுல்லா” என்று பெயரிட முடிவு செய்தார்.

கல்வான் என்பது காஷ்மீரிய மொழியில் கொள்ளைக்காரன் என்று பொருள். கல்வான் என்பது அவர்களது குடும்ப பெயர் ஆகும். எனிலும் ‘கல்வான்’ என்ற சொல்லுக்கு காஷ்மீர் மொழியில் குதிரை பராமரிப்பாளர் என்றும். “காஷ்மீரின் கல்வான்கள் அல்லது குதிரை பராமரிப்பாளர்கள் சிலர் டம்ஸின் சந்ததியினர் என்றும் இருவேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

குலாம் ரசூல் கல்வான்

குலாம் ரசூலின் தாத்தா பெயர் காரா கல்வான் ஆகும். காரா கல்வான் என்பது காஷ்மீர் மொழியில் கருப்பு குதிரை கொள்ளையன் என்பதாகும். இவர் காஷ்மீர் மகாராஜாவின் படுக்கை அறையில் திருடும் போது கையும் களவுமாக சிக்கி தலை துண்டிக்கப்பட்டார். ஆனால் குலாம் ரசூல் கல்வான், ஒரு சிறந்த மனிதர் என்று ஆங்கிலேயர்கள் கூறுகிறார்கள். அவர்கள் குலாம் ரசூல் கல்வான் பற்றி சர்வண்ட் ஆப் சாகிப் என்ற பெயரில் ஒரு புத்தகமே எழுதி உள்ளனர். அந்த புத்தகத்தில் பிரபல பிரிட்டிஷ் ஆய்வாளர் டாக்டர் டாம் லாங்ஸ்டாப், எங்கள் கேரவன் தலைவரான ரசூல் கல்வான் ஒரு சிறந்த மனிதர். அவர் அனைவராலும் மிக உயர்ந்தவராக மதிப்பிடப்பட்டார். அவரின் தந்தை ஒரு கொள்ளையர் இனத்தைச் சேர்ந்தாலும், அவரது தாய் மாறுப்பட்ட இனத்தை சேர்ந்தவர். எனவே குலாம் ரசூல் கல்வான் இரு குணாதிசயங்களை கொண்டு இருந்தார். அவர் முற்றிலும் நேர்மையானவர் என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இன்றைக்கும் கல்வானின் குடும்பம் லடாக் பகுதியில் உள்ளது. அவர்கள் தற்போது சொந்தமாக விடுதி ஒன்றை நடத்தி வருகின்றனர். ஒரு இந்தியரின் பெயரால் அழைக்கப்படும் இந்த கல்வான் பகுதியை தான் சீனா தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி பிரச்சினை செய்து வருகிறது. இந்தப்பகுதி மக்கள் வசிக்க முடியாத கடும் குளிர் நிலவும் பகுதியாகும். தற்போது அங்கு இந்திய- சீன ராணுவ வீரர்கள் மட்டுமே இருந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.