இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் பற்றிய கணிப்புகள் தோல்வி…

Read Time:2 Minute, 31 Second
Page Visited: 290
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் பற்றிய கணிப்புகள் தோல்வி…

இந்தியாவில் தொடக்கத்தில் ஊரடங்கு காரணமாகவும், மக்களின் ஆதரவு காரணமாகவும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், மே மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 3 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் பற்றிய கணிப்புகள் தோல்வியடைந்துவிட்டது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்து உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) இந்திய மருத்துவ ஆராய்ச்சி பத்திரிகை (IJMR) தலையங்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரத்தன்மை பற்றிய கணித மாதிரிகளின் கணிப்புகள் தோல்வி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இந்த தலையங்கத்தை உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பகுதிக்கான தொற்று நோய்கள் பிரிவின் முன்னாள் இயக்குனர் ராஜேஷ் பாட்டியாவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய வைராலஜி நிறுவனத்தின் இயக்குனர் பிரியா ஆபிரகாமும் கூட்டாக எழுதி இருக்கின்றனர்.

இதையொட்டி, உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான தொற்று நோய்கள் பிரிவின் முன்னாள் இயக்குனர் ராஜேஷ் பாட்டியா கூறுகையில் மேற்கத்திய நாடுகளில் சில நிறுவனங்கள் உருவாக்கிய பல கணித மாதிரிகள், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் மரணங்கள் பற்றிய அதிகளவிலான எண்ணிக்கை, துல்லியம் இல்லாதவை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %