மதுரையில் 58 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று…. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 55 ஆயிரத்தை நெருங்குகிறது..

Read Time:2 Minute, 42 Second

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நேற்று 2,115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநிலத்தில் உயிரிழப்பு 666 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 1,322 பேருடன் முதலிடத்தில் உள்ளது.

வேலூரில் 103 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும், திருவள்ளூரில் 86 பேரும், மதுரையில் 58 பேரும், காஞ்சீபுரத்தில் 39 பேரும், திருவண்ணாமலையில் 37 பேரும், விழுப்புரத்தில் 31 பேரும், கோவையில் 29 பேரும், தூத்துக்குடியில் 28 பேரும், நெல்லையில் 25 பேரும், ராமநாதபுரம், திண்டுக்கலில் தலா 22 பேரும், சேலம், சிவகங்கையில் தலா 18 பேரும், விருதுநகர், தேனியில் தலா 15 பேரும்.

தென்காசியில் 14 பேரும், திருச்சி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரியில் தலா 13 பேரும், திருவாரூரில் 10 பேரும், நாகப்பட்டினத்தில் 9 பேரும், புதுக்கோட்டை, திருப்பத்தூரில் தலா 8 பேரும், அரியலூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சியில் தலா 7 பேரும், நீலகிரியில் 6 பேரும், கடலூரில் 5 பேரும், ராணிப்பேட்டையில் 4 பேரும், தர்மபுரி, கரூரில் 3 பேரும், திருப்பூரில் இருவரும், ஈரோட்டில் ஒருவரும் புதியதாக வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,630 பேர் நேற்று குணம் அடைந்து உள்ளனர். இதுவரையில் 30 ஆயிரத்து 271 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். தமிழக மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 23 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க