உள்கட்டமைப்பு துறைகளில் சீன முதலீட்டை நுழைய விடாதீர்கள் – மம்தா பானர்ஜி!

Read Time:1 Minute, 49 Second

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார்.

அதில் கலந்துக்கொண்ட மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு ஆதரவாக பேசினார். மம்தா பானர்ஜி பேசுகையில், சீனா, ஜனநாயக நாடு அல்ல, சர்வாதிகார நாடாகும். எனவே, தான் விரும்பியதை எல்லாம் செய்ய முனையும். ஆனால் இந்தியா ஜனநாயக நாடு ஒன்றுபட்டுத்தான் செயலாற்ற முடியும்.

எல்லை பிரச்சனையில் இந்தியா வெற்றி பெறும், சீனா தோல்வி அடையும். அதற்கு நாம் ஒற்றுமையாக பேச வேண்டும், ஒற்றுமையாக சிந்திக்க வேண்டும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

அனைத்துக்கட்சி கூட்டம், ஒரு நல்ல செய்தியாகும். இந்த பிரச்சினையில், நமது படையினருக்கு பின்னால் மேற்கு வங்காள அரசு ஒன்றுபட்டு நிற்கிறது. மத்திய அரசுக்கு உறுதியான ஆதரவை தெரிவிக்கிறது.

மேலும், தொலைத்தொடர்பு, ரெயில்வே, சிவில் விமான போக்குவரத்து போன்ற துறைகளில், உள்கட்டமைப்பு துறைகளில் சீன நிறுவனங்களை நுழைய விடாதீர்கள். இதனால் நாம் பிரச்சினைகளை சந்தித்தாலும், அவர்களை நுழைய விடக்கூடாது என வலியுறித்தினார்.

மேலும் படிக்க

லடாக் மோதல் சம்பவம் உளவுத்துறையின் தோல்வியா…? சோனியா காந்தி கேள்வி..