இந்திய-சீன எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது – லெப்டினன்ட் ஜெனரல்

Read Time:1 Minute, 13 Second

இந்திய ராணுவத்தின் 15-வது படைப்பிரிவு தலைமை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், லடாக் விவகாரத்தை பொறுத்தவரையில் 14-வது படைப்பிரிவு கவனித்து வருகிறது. நாங்களும் அதில் ஒரு அங்கம் தான். நான் அறிந்தவரை, எல்லைக்கோடு பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.

அங்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அவற்றையெல்லாம் இந்திய ராணுவம் செய்து இருக்கிறது. அதற்கான திறனும் ராணுவத்துக்கு இருக்கிறது. இதுபோன்ற மோதல்கள் எல்லாம் தற்செயலாக நடப்பவைதான் என்று ராணுவத்துக்கு தெரியும்.

அதே சமயத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலைமை சீராக இருக்கிறது. எல்லைக்கு அப்பால் இருந்தோ, காஷ்மீர் பகுதியிலோ எந்த அசம்பாவிதமும் நடக்காதவகையில் உஷாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.