கொரோனாவை 5 நாட்களில் குணப்படுத்தும் சித்தமருத்துவம்..! அனைத்து கொரோனா மையங்களுக்கும் விரிவு படுத்த தமிழக அரசு முடிவு!

Read Time:2 Minute, 18 Second

தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 183 பேரை வெறும் 5 நாட்களில் குணமாக்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்து இருக்கிறார்.

சித்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் மொத்தம் 3 வகையான மருந்து கலவைகளை உருவாக்கி இருப்பதாகவும், இதனை கொரோனா தடுப்பு மருந்தாகவும், குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சித்த மருந்துகளை பயன்படுத்தி, சென்னை வளசரவாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 160 பேரும், புழல் சிறையில் பாதிக்கப்பட்டிருந்த 23 கைதிகளும் இதுவரை இல்லாத வகையில் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். இது ஒரு மருத்துவ அதிசயம் என்றால் மிகையில்லை. சென்னையில் உள்ள அனைத்து கொரோனா மையங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கலாம் என தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இதுதொடர்பான நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கொரோனா மையங்களிலும் நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிப்பது என தமிழக அரசு முடிவு.

ஏற்கனவே இதுபோல் 2009ஆம் ஆண்டு ஆண்டில் தமிழகத்தில் பரவிய பன்றி காய்ச்சலை குணப்படுத்த கபசுர குடிநீரையும், 2012ஆம் ஆண்டில் பரவிய டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பரிந்துரைத்த நிலவேம்பு குடிநீரை அனைவரும் பருகும்படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். இதன் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பெருமளவில் கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.