மருத்துவம் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு சீனா, ரஷியாவை சார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும் – அமெரிக்கா!

Read Time:1 Minute, 39 Second

நேட்டோ அமைப்பு 1949-ல் ‘அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்பட 29 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கப்பட்டது.

உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ரீதியிலான உறவை வலுப்படுத்துவதையும், ஆயுதங்களை இறக்குமதி, ஏற்றுமதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. ஆயினும், பாதுகாப்பு மட்டுமின்றி வர்த்தக ரீதியிலும் இணைப்பில் உள்ளன.

இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை வாங்க சீனா மற்றும் ரஷியாவை சார்ந்திருப்பதை உறுப்பு நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உறுப்பு நாடுகள் தங்கள் ராணுவத்தை தயார் நிலையில் வைக்கவும் நேட்டோவுக்கு எதிரான பிரச்சாரங்கள் மற்றும் தவறான தகவல்களை அம்பலப்படுத்தவும் ஊக்குவிக்கிறோம். கொள்ளையடிக்கும் அந்நிய நேரடி முதலீட்டில் இருந்து பாதுகாக்க மருத்துவ உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பிற தேவைகளுக்கு சீனா, ரஷியாவை சார்ந்து இருப்பதை குறைக்க வேண்டுகிறோம்“ என தெரிவித்துள்ளார்.