1996-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி ‘வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’ – கங்குலி..!

Read Time:2 Minute, 41 Second

லண்டன் லார்ட்சில் 1996-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. முதல் இன்னிங்சில் 20 பவுண்டரியுடன் 131 ரன்கள் விளாசிய கங்குலி, அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த 10-வது இந்தியர் என்ற சிறப்பை பெற்றார். இதே டெஸ்டில் மற்றொரு இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும் அறிமுகம் ஆனார். அவர் முதல் இன்னிங்சில் 95 ரன்கள் குவித்தார். இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது.

24 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (நேற்று) டெஸ்டில் அறிமுகம் ஆனதை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று நினைவு கூர்ந்த கங்குலி, ‘வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’ என்று குறிப்பிட்டு அந்த போட்டியில் தான் ஆடிய சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

‘நான் ஆட்டம் இழந்த போது மறுமுனையில் விளையாடிக் கொண்டு இருந்த டிராவிட் சதத்தை எட்டுவார் என்ற நம்பிக்கையோடு லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் 5 ரன்னில் சதத்தை நழுவ விட்டு விட்டார். அன்றைய தினம் அவரும் சதம் அடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்’ என்றும் கங்குலி கூறினார்.

இதுபோல் 2011-ம் ஆண்டு இதே நாளில் தான் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கினார். ஆனால் அவரது அறிமுக ஆட்டம் இனிமையானதாக அமையவில்லை. கிங்ஸ்டனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் கோலி 4, 15 ரன்களில் முறையே ஆட்டம் இழந்தார். இருப்பினும் அந்த டெஸ்டில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %