‘டிக்டாக்’ உள்பட 52 சீனா மொபைல் செயலிகளை பயன்படுத்த ‘உத்தரபிரதேச சிறப்பு அதிரடி படையினர்க்கு தடை’ உத்தரவு..!

Read Time:2 Minute, 21 Second

உத்தரபிரதேச சிறப்பு அதிரடி படையினர் ‘டிக்-டாக், யுசி பிரவுசர்’ உள்ளிட்ட 52 சீன மொபைல் ‘ஆப்’களை தங்ககளது செல்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கடந்த வெள்ளியன்று உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிறப்பு படைப்பிரிவில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். மேலும் அவர்களது குடும்பத்தினரும் சீன தொடர்பு உடைய மொபைல் செயலிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையின் இன்ஸ்பெக்டர் இயக்குனர் அமிதாப் யாஸ் கூறுகையில், ’சீன மொபைல் செயலிகளை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருப்பது துறை சார்ந்த நடவடிக்கை. இந்த உத்தரவு இந்த துறையை சேர்ந்தவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே பொருந்தும்.’ என்று கூறினார்.

இதன் மூலம் இந்தியாவுக்கு வெளியே நம் வீரர்களின் தனிப்பட்ட தகவல் திருட்டை தடுப்பதற்கு இது உதவும் என இவ்விவகாரம் தொடர்பாக நன்கு தகவல் அறிந்தவர்கள் அறிவர்.

இந்த 52 செயலிகள் பட்டியலில், வீடியோ கான்ஃபரன்ஸ் வசதி கொண்ட ‘ஜூம்’ செயலி இடம் பெற்றிருக்காது ஏனென்றால் இதன் பயன்பாட்டை ஒரு மாதத்திற்கு முன்னரே தங்களது கைபேசி, மடிக்கணினி மற்றும் கணினி ஆகியவற்றிலிருந்து நீக்கும்படி உத்தரவிட்டோம்.

உத்தரபிரதேச சிறப்பு அதிரடி படையினர் மற்றும் குடம்பத்தினர்களுக்கு தடை செய்யப்பட்ட செயலிகள் விபரம்:-

 • TikTok, Vault-Hide, Vigo Video, Bigo Live, Weibo
 • WeChat, SHAREit, UC News, UC Browser
 • BeautyPlus, Xender, ClubFactory, Helo, LIKE
 • Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder
 • APUS Browser, VivaVideo- QU Video Inc
 • Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab)
 • Mi Community, DU recorder, YouCam Makeup
 • Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser
 • DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah
 • CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map
 • Wonder Camera, ES File Explorer, QQ International
 • QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music
 • QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings
 • Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space