மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு!

Read Time:4 Minute, 1 Second
Page Visited: 309
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு என்னதான் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும் நோய் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

சென்னையைத் போல் மதுரை மாவட்டத்திலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக பாதிப்பு உறுதி செய்யப்படும் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை போல், தற்போது மதுரையிலும் நாளை நள்ளிரவு 12 மணி முதல் 7 நாள்களுக்கு அதாவது 30-ம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடனது மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளிலும், திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் / சேவைகள் யாவை?

 • அம்மா உணவகங்கள், சமுதாயக் கூடங்கள் இயங்க அனுமதி உண்டு.
 • மருத்துவ அவசர வாகனங்கள் இயங்க மட்டுமே அனுமதி உண்டு.
 • மொபைல் செயலி வாயிலாக உணவு பொருள்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
 • உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • தள்ளுவண்டிக் கடைகளில் காய்கறி, பழங்களை விற்பனை செய்ய காலை 6 மணி முதல் 1 மணி வரை அனுமதி.
 • அத்தியாவசியப் பொருள்களை மக்கள் நடந்து சென்றே வாங்க வேண்டும்.
 • ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகளுக்குச் சென்று பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கலாம்.
 • கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்கியிருந்தால், பணிகளை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

என்ன நடவடிக்கைகள் / சேவைகள் தடைசெய்யப்பட்டு உள்ளன?

 • ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
 • தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது.
 • பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது.
 • கட்டுமான தளத்திற்குள் உள்ள தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்காத கட்டுமான நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதி கிடையாது.

மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பெட்ரோல் பங்குகள் மற்றும் நடமாடும் விற்பனையகம் காலை 6:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை திறந்திருக்கும்.

மக்கள் தங்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகளுக்கு மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %