“எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுங்கள்” இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம்…

Read Time:4 Minute, 21 Second
Page Visited: 526
“எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுங்கள்” இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம்…

எல்லையில் சீனா வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது.

லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் கடந்த மாதம் சீன ராணுவம் ஊடுருவியதை இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் 15-ம் தேதி இரவு திடீரென்று பெரும் மோதல் வெடித்தது. இருநாட்டு வீரர்கள் மோதிக்கொண்ட சம்பத்தில், இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர்.

இந்த மோதல் விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எல்லையில் நீடித்து வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. இருப்பினும் பதற்றம் தணிந்ததாக தெரியவில்லை. இதற்கிடையே எல்லை நிலவரம் குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். எல்லையில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கணிசமான சுகோய் 30 எம்.கே.ஐ., ஜாகுவார், மிராஜ் 2000 போன்ற தாக்குதல் விமானங்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்களை லே, ஸ்ரீநகர் போன்ற முன்னணி படைத்தளங்களில் விமானப்படை தயார் நிலையில் வைத்து இருக்கிறது. இந்த நிலையில் முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் நேற்று (ஹூன் 21) மீண்டும் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார்.

இதில் ராணுவ தளபதி நரவானே, கடற்படை தளபதி கரம்பிர் சிங், விமானப்படை தளபதி பதாரியா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், லடாக்கில் தற்போது நிலவும் சூழல், முப்படைகளின் தயார் நிலை உள்ளிட்ட அம்சங்களை ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். பின்னர் சீனாவுடனான 3,500 கி.மீ. தரைவழி எல்லை மற்றும் வான் எல்லையில் சீனாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவம் மற்றும் விமானப்படைக்கு அறிவுறுத்தி உள்ளார். இதைப்போல கடல் வழியை பாதுகாக்க கடற்படையையும் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும், சீனாவின் எத்தகைய அத்துமீறலை எதிர்கொள்வதிலும் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுமாறு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி இருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக சீனா ஆக்கிரமிப்பு மனநிலையுடன் எல்லையில் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு படை வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதனால் பாதுகாப்பு படையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) ரஷியா செல்கிறார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %