லடாக் மோதல்: கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் கண்காணிப்பு சாவடியை இந்திய வீரர்கள் அகற்றியது எப்படி…?

Read Time:3 Minute, 44 Second
Page Visited: 979
லடாக் மோதல்: கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் கண்காணிப்பு சாவடியை இந்திய வீரர்கள் அகற்றியது எப்படி…?

சீனாவை ஒட்டியுள்ள லடாக் எல்லையில் இந்தியப் பகுதிக்குள் சாலை அமைக்கும் பணி கடந்த மே மாதம் தொடக்கத்தில் நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று சொந்தம் கொண்டாடியது. மேலும், அங்கிருந்து இந்திய ராணுவ படை வெளியேற வேண்டும் எனவும் கூறியது. இதனை தொடர்ந்து, அப்பகுதிக்குள் சீன ராணுவப் படையினர் அத்துமீறி நுழைய முயற்சி செய்தனர்.

இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தபோது இரு தரப்புக்கும் இடையே லேசான மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் தங்கள் ராணுவ வீரர்களை அங்கு குவித்ததால் எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியது. இதனையடுத்து இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, அப்பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை விலக்கி கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம்படி இந்திய வீரர்கள் அங்கிருந்து திரும்ப தொடங்கினர். ஆனால், சீன வீரர்கள் தங்கள் வாலை ஆட்ட தொடங்கினர். தங்கள் பகுதிக்கு திரும்பாமல் அங்கேயே இருந்தனர். மேலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாங்கள் அமைந்திருந்த கண்காணிப்பு சாவடியை அகற்ற மறுத்துவிட்டனர். மாறாக கூடுதல் ராணுவ வீரர்களை அவர்கள் குவிக்க தொடங்கினர். 350 சீன வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம் இந்தியா தரப்பில் 16-வது பீகார் படைப்பிரிவை சிறந்த வீரர்கள் உட்பட 100 வீரர்கள் மட்டுமே இருந்து உள்ளனர்.

இவர்களை 16-வது பீகார் படைப்பிரிவின் தலைவர் சந்தோஷ் பாபு வழிநடத்தினார். சந்தோஷ் பாபு தலைமையில் வீரர்கள், சீன வீரர்களிடம் சென்று கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் கண்காணிப்பு சாவடியை அகற்ற வலியுறுத்தினார். அப்போது இருதரப்பும் வீரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது

இந்திய வீரர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்த கற்கள், கம்பிகள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்திருந்த சீன வீரர்கள் திட்டமிட்டபடியே தாக்குதல் நடத்த தொடங்கினர். இந்திய வீரர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே சுமார் 4 மணி நேரங்களுக்கு மேல் சண்டை நீடித்தது. இந்த சண்டைக்கு மத்தியில் 16-வது பிகார் படைப் பிரிவை சேர்ந்த வீரர்கள் சீன ராணுவ வீரர்கள் அமைத்திருந்த கண்காணிப்பு சாவடி மற்றும் அவர்களின் முகாம்களை அகற்றி, சீனாவின் வாலை நறுக்கினர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %