சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 1.2 லட்சம் வீடுகளை கண்காணிக்க புதிதாக 4,500 பேர் நியமனம்!

Read Time:2 Minute, 43 Second
Page Visited: 244
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 1.2 லட்சம் வீடுகளை கண்காணிக்க புதிதாக 4,500 பேர் நியமனம்!

சென்னை மாநகராட்சியில் 1 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிதாக 4 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று ரிப்பன் மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியவர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் என சுமார் 8 லட்சம் பேர் 1.2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர் இவர்களை மாநகராட்சி தனிமைப்படுத்தி உள்ளது. இவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்கவும் அவர்களை கண்காணிக்கவும், இளைஞர்கள், இளம்பெண்கள் என 4 ஆயிரத்து 500 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 32 ஆயிரம் தெருக்களில், 7 ஆயிரத்து 500 தெருக்களில் கொரோனா தொற்று இருக்கிறது. புதிதாக நியமனம் செய்யப்படுபவர்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 5 தெருக்களுக்கு ஒருவரும், மக்கள் தொகை குறைவான பகுதிகளில் 15 தெருக்களுக்கு ஒருவரும் என பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வாரமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சென்னையின் பல்வேறு இடங்களில் 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் 90 சதவீத மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதன் பலனாக வரும் நாட்களில் பாதிக்கபடுகிறவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %