இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 312 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்து உள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, இது தொடர்ந்து 11-வது நாள் ஆகும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டுவதற்கு 64 நாட்கள் ஆயின. அடுத்து 2 லட்சம் ஆவதற்கு 2 வாரங்கள் எடுத்துக்கொண்டது. அடுத்த 10 நாளில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 4 லட்சத்தை கடந்து 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 என்ற அளவை எட்டியது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. இதுதொடர்பான விபரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 11) காலை வெளியிடப்பட்ட்ட புள்ளிவிவர பட்டியலில், ஒரே நாளில் கொரோனாவால் 312 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புதிதாக 14,933 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14,011 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,40,215 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 2,48,189 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 1,78,014 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்பில் தொடர்ந்து மராட்டியம் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. அங்கு பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,35,796 ஆகும். இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 62655 ஆகும். மூன்றாம் இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் 62087 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் – 48
ஆந்திரா – 9372
அருணாச்சல பிரதேசம் – 139
அசாம் – 5586
பீகார் – 7825
சண்டிகர் – 411
சத்தீஸ்கர் – 2303
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் டியு – 91
டெல்லி – 62655
கோவா – 864
குஜராத் – 27825
ஹரியானா – 11025
இமாச்சலப் பிரதேசம் – 727
ஜம்மு-காஷ்மீர் – 6088
ஜார்க்கண்ட் – 2137
கர்நாடகா – 9399
கேரளா – 3310
லடாக் – 847
மத்தியப் பிரதேசம் – 12078
மகாராஷ்டிரா – 135796
மணிப்பூர் – 898
மேகாலயா – 44
மிசோரம் – 141
நாகாலாந்து- 280
ஒடிசா – 5303
புதுச்சேரி – 383
பஞ்சாப் – 4235
ராஜஸ்தான் – 15232
சிக்கிம் – 78
தமிழ்நாடு – 62087
தெலுங்கானா – 8674
திரிபுரா – 1237
உத்தரகண்ட் – 2402
உத்தரபிரதேசம் – 18322
மேற்கு வங்கம் – 14358