உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: அச்சத்தில் உலக நாடுகள்!

Read Time:2 Minute, 33 Second
Page Visited: 214
உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: அச்சத்தில் உலக நாடுகள்!

கொரோனா தொற்று உருவானதில் இருந்து வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேருக்கு தொற்று உறுதி! உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.

2020-ம் ஆண்டில் மக்கள் அதிகம் உச்சரித்ததும், மக்களை அதிகம் அச்சுறுத்தியதும் ‘கொரோனா’. சீனாவின் உகானில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த ஆட்கொல்லி வைரஸ் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

அப்படி கொரோனாவின் பிடியில் உலக அளவில் அதிகமானோர் சிக்கிய மோசமான நாளாக நேற்று மாறியிருக்கிறது. நேற்று ஒரேநாளில் 1 லட்சத்துக்கு 83 ஆயிரத்து 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதில் அதிகபட்சமாக பிரேசிலில் 54,771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அடுத்ததாக 36,617 அமெரிக்கர்களும், 15,400 இந்தியர்களும் இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்று இருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக இதுவரை உலக அளவில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை மட்டும் 4.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆவர்.

ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தி ஓய்ந்திருந்த சீனா, தென்கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைகாட்டி வருகிறது.

கொரோனாவின் பிடியில் இருந்து ஸ்பெயின் நாடு மெல்ல மெல்ல மீண்டு வருவதால் அங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த அவசரநிலை திரும்ப பெறப்பட்டு உள்ளது. அங்கு இயல்பு நிலை கொண்டு வரப்பட்டாலும், வைரசின் 2-வது அலை வீசக்கூடும் என்பதால் மக்கள் அனைவரும் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு பிரதமர் பெட்ரோ சாஞ்சேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %