இந்தியா – சீனா ஏற்றுமதியும், இறக்குமதியும் ஒரு வர்த்தக பார்வை.!

Read Time:1 Minute, 15 Second

அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தந்த தகவலின்படி, சுமார் 3 ஆயிரம் பொருட்களை நாம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

  • சீனாவில் இருந்து ஆண்டுக்கு 4.5 லட்சம் கோடி மின்னணு சாதனங்கள் இறக்குமதியாகிறது.
  • மருந்துகளை தயாரிக்கும் மூலப்பொருட்களில் 85 சதவீதம் சீனாவில் இருந்து இறக்குமதி.
  • 1,000-க்கும் மேற்பட்ட சீனாவின் மெகா நிறுவனங்கள் இந்தியாவில் 8 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளன.

சீனாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பு 70.32 பில்லியன் டாலர்கள். இந்தியா தன் இறக்குமதி தேவைகளில் 16 சதவீதம் சீனாவை நம்பியுள்ளது.

இந்தியாவிடம் இருந்து சீனா இறக்குமதி செய்வது 16.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களே. சீனாவிற்கு பருத்தி, வைரக்கற்கள், தாமிரம், மருந்து, அரிசி, சர்க்கரை, முருங்கை பவுடர், மருதாணி பவுடர் ஆகியவற்றை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.