கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவும்..! இந்திய விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு!

Read Time:2 Minute, 57 Second
Page Visited: 257
கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவும்..! இந்திய விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடிப்பு!

கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள IIT புவி அறிவியல் துறை தலைவர் மணீஷ் குமார் தலைமையில் குஜராத் உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மற்றும் குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் கொரோனா வைரஸ் கழிவுநீரில் பரவுகிறது என்பதை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் இருந்து பழைய பிரானா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தினமும் 10 கோடியே 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் வருகிறது. அங்கு சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை வைத்து கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், கழிவுநீரில் கொரோனா வைரஸ் (SARS-CoV-2) மரபணுவை ஒத்துள்ள ORF1ab, N மற்றும் S ஆகிய 3 மரபணுக்களும் கழிவுநீரில் காணப்பட்டன. மே 8-ந் தேதி காணப்பட்ட வைரஸ் அடர்த்தியை விட மே 27-ந் தேதி வைரஸ் அடர்த்தி 10 மடங்கு அதிகமாக இருந்தது உள்ளது. அதாவது, ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வைரஸ் அடர்த்தி அதிகரித்துள்ளது.

மேலும் இது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுடன் ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. இதனால், இந்தியாவிலும் கழிவுநீர் மூலம் கொரோனா பரவும் என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் கழிவுகளில் கொரோனா வைரஸ் இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

இத்தாலியில் முதலாவது கொரோனா பாதிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் தான் ஏற்பட்டது. ஆனால், அதற்கு 2 மாதங்களுக்கு முன்பே, கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணு போன்ற வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, மனிதர்கள் மூலம் மட்டுமே கொரோனா பரவும் என்ற கண்ணோட்டத்தில் மாறுதல் வர வாய்ப்புள்ளது.

1 0
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %