2010 – 2013-ம் ஆண்டு வரை, சீனா 600 தடவை ஊடுருவல்.. 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலம் பறிபோனது..!

Read Time:3 Minute, 18 Second
Page Visited: 482
2010 – 2013-ம் ஆண்டு வரை, சீனா 600 தடவை ஊடுருவல்.. 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலம் பறிபோனது..!

காங்கிரஸ் ஆட்சியில் தான் 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலப்பகுதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீன எல்லை விவகாரம் தொடர்பாக மன்மோகன்சிங் கருத்துக்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி.

சீன எல்லை பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசை விமர்சித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். நாட்டின் ஒற்றுமையை பற்றியும் லாடாக்கில் பலியான வீரர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவருக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது ‘டுவிட்டர்‘ பதிவு மூலம் பதில் அளித்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஒற்றுமை பற்றி கூறியுள்ளார். காகிதத்தில் உள்ள இந்த வார்த்தை ‘ஒற்றுமையை’ யார் சீர்குலைப்பது என்பதை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

ஒற்றுமையின் உண்மையான அர்த்தத்தை காங்கிரஸ் தலைமை புரிந்து கொள்ள வேண்டும். நமது படையினரை அவமதிப்பதையும், கேள்வி கேட்பதையும் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் கட்சியும் நிறுத்திக் கொள்ள வேண்டும். துல்லிய தாக்குதலுக்கு பிறகு கூட அவர்கள் இப்படித்தான் செயல்பட்டனர்.

சீனாவிடம் ஒப்படைப்பு

மன்மோகன்சிங் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் தான், 43 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய நிலப்பரப்பு, எவ்வித எதிர்ப்பும் இன்றி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, நூற்றுக்கணக்கான சதுர கி.மீ. இந்திய பகுதி சீனாவிடம் தாரை வார்க்கப்பட்டது.

அவரது ஆட்சிக்காலத்தில், 2010-ம் முதல் 2013-ம் ஆண்டு வரை 600 தடவை சீன ஊடுருவல்கள் நடந்தன.

மன்மோகன்சிங்கின் கருத்துகள் வெறும் வார்த்தை விளையாட்டுகளாகவே உள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர்களின் நடத்தையையும், செயல்களையும் பார்க்கும் பொதுமக்கள், இனிமேலும் அவர்களின் வார்த்தைகளை நம்ப மாட்டார்கள்.

130 கோடி மக்களும் பிரதமர் மோடியை நம்புகிறது, ஆதரிக்கிறது. இதுபோன்ற சவாலான நேரங்களில் பிரதமரின் நிர்வாக அனுபவத்தை பார்த்துள்ளனர். மற்ற எல்லாவற்றையும் விட அவர் தேசநலனையே பெரிதாக கருதுவதை கண்டுள்ளனர். இவ்வாறு ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %