தொடர்ந்து 17-வது நாளாக ஏறுமுகம்..! சென்னையில் பெட்ரோல் விலை ரூ.83-ஐ தொட்டது..

Read Time:1 Minute, 8 Second

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் மாற்றத்தை கண்டு வருகிறது. 82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ந்தேதி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கிய எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்த தொடர் விலை உயர்வால், 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80-ஐ கடந்துள்ளது.

தொடர்ந்து 17-வது நாளாக விலை உயர்வில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 17 காசு உயர்ந்து, ரூ. 83 ரூபாய் 4 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 47 காசு அதிகரித்து, ரூ. 76 ரூபாய் 77 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோலை விட, டீசல் விலை தான் அதிகளவில் உயர்ந்து வருகிறது. கடந்த 17 நாட்களில் மட்டும் பெட்ரோல் 7 ரூபாய் 50 காசும், டீசல் 8 ரூபாய் 55 காசும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.