இந்தியாவில் 1 லட்சம் மக்களுக்கு ஒருவர் வீதம்.. கொரோனாவுக்கு உயிரிழப்பு..!

Read Time:2 Minute, 6 Second
Page Visited: 241
இந்தியாவில் 1 லட்சம் மக்களுக்கு ஒருவர் வீதம்.. கொரோனாவுக்கு உயிரிழப்பு..!

இந்தியாவில், 1 லட்சம் மக்கள் தொகைக்கு ஒருவர் வீதம் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் இது, உலக அளவில் மிகக்குறைவு என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக சுகாதார அமைப்பு, கடந்த 22-ந் தேதி ஒரு புள்ளி விவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலக அளவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் தான் மிகக்குறைவு என்று தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையில், உலக அளவில் கொரோனா உயிரிழப்பின் சராசரி அளவு, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 6.04 என்ற விகிதத்தில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு ஒருவர் வீதம் தான் இறந்துள்ளனர்.

இதுவே, இங்கிலாந்தில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 63.13 பேரும், ஸ்பெயின் நாட்டில் 60.60 பேரும், இத்தாலியில் 57.19 பேரும், அமெரிக்காவில் 36.30 பேரும், ஜெர்மனியில் 27.32 பேரும், பிரேசில் நாட்டில் 23.68 பேரும், ரஷியாவில் 5.62 பேரும் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு, உரிய நேரத்தில் தொற்றுகளை கண்டறிதல், அவர்களின் தொடர்புகளை கண்டறிதல், திறமையான சிகிச்சை முறை ஆகியவையே காரணம் ஆகும்.

குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, இது 56.38 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %