தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பது என்பது மக்களிடம் தான் உள்ளது.. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Read Time:1 Minute, 44 Second

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், உலக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் பயத்துடன் நாட்களை கடத்தும் சூழல் நிலவுகிறது.

மனித சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்துகளோ, தடுப்பூசியோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் தடுப்பு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்வாடப்பட்டவர்கள் குணப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தைப் பொருத்த அளவில், மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சநிலையை அடையும். எனினும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மக்கள் தங்களை எவ்வளவு ஈடுபடுத்திக் கொள்கிறார்களோ? அதன்படி தான் தொற்று பாதிப்பு குறையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடுமையாக பின்பற்றாவிட்டால், மீண்டும் பரவல் தொடங்கக் கூடும். தொற்று பரவுவதும், தடுக்கப்படுவதும் மக்களின் கையில் தான் உள்ளது. முககவசம் அண்ணியுதல், கைகளை சோப்புகள் கொண்டு கழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தால் இவை அனைத்தும் மிக, மிக அவசியம் என்பது மருத்து நிபுணர்களின் எச்சரிக்கை கருத்தாக உள்ளது.