பாகிஸ்தான் தனது தூதரக ஊழியர்கள் 50 சதவீதமாக குறைக்க இந்தியா கெடு..!

Read Time:2 Minute, 7 Second

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை 7 நாட்களுக்குள் பாதியாக குறைக்குமாறு இந்தியா கெடு விதித்துள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று நேரில் அழைத்தது. அவரிடம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், உளவு வேலையில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. கடந்த மே 31-ந் தேதி, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 2 பேர் கையும், களவுமாக பிடிபட்டு வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது,

மேலும் சமீபத்தில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 2 அதிகாரிகளை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்று காட்டுமிராண்டித்தனமாக நடத்தியதை சுட்டிக்காட்டியது.

இவ்வாறு பாகிஸ்தானின் செயல்பாடுகள் வியன்னா தீர்மானத்துக்கோ, இருதரப்பு ஒப்பந்தங்களுக்கோ பொருத்தமாக இல்லை.

எனவே, பாகிஸ்தானுடனான தூதரக உறவை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் எண்ணிக்கையை 7 நாட்களுக்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.

அதுபோல் இந்தியாவும் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தூதரக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துக் கொள்ளும் என்று தெரிவித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %