நாடாளுமன்றத்தில் ஒசாமா பின்லேடனுக்கு ‘தியாகி’ பட்டம்.. இம்ரான் கான் பேசியது என்ன…?

Read Time:2 Minute, 59 Second
Page Visited: 322
நாடாளுமன்றத்தில் ஒசாமா பின்லேடனுக்கு ‘தியாகி’ பட்டம்.. இம்ரான் கான் பேசியது என்ன…?

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை ‘தியாகி’ என்று வர்ணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் போரில் பாகிஸ்தான் பங்கேற்றிருக்க கூடாது என்றும் கூறியிருக்கிறார். பயங்கரவாதம் விவகாரத்தில் உலக நாடுகளின் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் பாகிஸ்தான் இப்போது தன்னுடைய பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடை வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறது.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் 2011 மே 2-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவுத்துறை (சிஐஏ) சிறப்பு நடவடிக்கையால் கொன்றது.

இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமத்தில் பேசியிருக்கும் இம்ரான் கான், அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒசாமாவை கொன்றது. ஆனால் பாகிஸ்தான் அரசுக்கு இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதன் பிறகு தான் பாகிஸ்தானை அனைவரும் எதிர்மறையாக விமர்சிக்க தொடங்கினர். இதன் மூலம் பாகிஸ்தான் தர்மசங்கடத்துக்கு ஆளானது.

அமெரிக்கப் படையினரின் பயங்கரவாத எதிர்ப்பு போரில் 70,000 பாகிஸ்தானியர்கள் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் பங்கேற்றிருக்கவே கூடாது என்று பேசியிருக்கிறார். இம்ரானின் இந்த பேச்சு பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஒசாமா பின்லேடன் அபோத்தாபாத்தில் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டு அவரது உடல் கடலில் வீசப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க கொடியை எரித்து, அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு போரில் பாகிஸ்தான் பங்கேற்க கூடாது என்று பாகிஸ்தானில் பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அவர்களின் உணர்வை ஆதரிக்கும் வகையில் இப்போது இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இம்ரான் கானின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %