இந்தியா – சீனா எல்லை பிரச்சினை: சீனா தூதரகத்திற்கு 800 செம்மறியாடுகளை அனுப்பி பதிலடி கொடுத்த வாஜ்பாய்..! ருசிகர சம்பவம்…

Read Time:6 Minute, 47 Second

தற்போது, சீனாவை அம்பலப்படுத்துவது என்பது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கே சவாலாகும் (சத்தியமா நாங்க கொரோனா வைரஸ் பத்தி பேசல).

1965-ம் ஆண்டில் இளம் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாயின் புத்திசாலித்தன செயலால் சீனா மிக கடுமையாக கடுப்பாக்கியது. அந்த சுவாரஸ்யமான சம்பவம் தொடர்பாக தெரிந்துக்கொள்வோம்.

1962-ம் ஆண்டு, இந்தியா – சீனா இடையே போர் ஏற்பட்டது, இதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் இருந்தாலும். 1959-ம் ஆண்டு திபெத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது அப்போது அந்நாட்டின் புத்த மதத்தலைவர் தலாய் லாமா இந்தியாவில் அடைக்களம் புகுந்தார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சீனா எல்லை பிரச்னைகளை காரணம் காட்டி இந்தியாவுடனான போரைத் தொடங்கியது. இந்த போரில் இந்தியாவை சீனா வீழ்த்தியது. எனிலும், இந்தியாவுக்கு பல பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. மேலும், எதிர்காலத்தில் போர் ஏற்பட்டால் இந்தியா எதிர்க்கொள்ளும் வகையில் தனது படைபலத்தை வலுப்படுத்த உதவியது.

போருக்குப் பின்னரும் அவ்வப்போது எல்லையில் அத்துமீறும் பணியை சீனா தொடர்ந்து செய்து வந்தது, இன்றும் செய்து வருகிறது என்பது வேறு விஷயம். அதுபோல் 1965-ம் ஆண்டு எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் 800 செம்மறியடுகளையும், 59 எருதுகளையும் திருடிவிட்டதாக சீன அரசு குற்றம் சாட்டி இந்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அந்த சமயத்தில் இந்திய ராணுவம் காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல் பயங்கரவாதிகளுக்கு பதிலடியை கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ஆடுக்களை திரும்ப ஒப்படைக்காவிட்டால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என சீனா வழக்கம்போல் மிரட்டல் விடுத்தது. இத்தகைய கேலிக்குரிய குற்றச்சாட்டை சுமத்திய சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாய் பொதுமக்களுடன் டெல்லியில் உள்ள சீன தூதரகத்துக்கு ஆட்டு மந்தைகளை விட்டுவிட்டார்.

அப்போது வாஜ்பாய் இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஜன சங்கத்தின் தலைவராக இருந்த அவர் சீனாவிற்கு சுவாரஸ்யமான பதிலடியை கொடுக்கும் வகையில், டெல்லியில் 800 செம்மறியாடுகளை திரட்டி சீன தூதரகத்திற்குள் அனுப்பிவிட்டார். ஆடுகளில் தொங்கவிடப்பட்ட அட்டையில் எங்களை சாப்பிடுங்க… உலகை காப்பாற்றுங்கள் என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. இச்சம்பவம் சீனாவை கடுமையாக அவமானப்படுத்தியது.

இது சீனாவை மிகவும் கோபப்படுத்தியது, அதனால் லால் பகதூர் சாஸ்திரி அரசாங்கத்திற்கு மற்றொரு கடிதம் எழுதியது. வாஜ்பாயின் ஆர்ப்பாட்டத்தை சீன தேசத்திற்கு “அவமானம்” என்று சீனா கூறியதுடன், சாஸ்திரி அரசாங்கத்தின் ஆதரவோடு இது நடந்ததாக குற்றம் சாட்டியது. அதற்கு பதிலளித்த இந்தியா “டெல்லி மக்கள் சிலர் சுமார் 800 ஆடுகளை ஊர்வலமாக அழைத்து சென்றனர்” என்று உறுதிப்படுத்தியது.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இந்த அற்பமான பிரச்சினைகளுக்கு இந்தியாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல் மற்றும் போர் எச்சரிக்கை விடுக்கும் சீனாவிற்கு எதிரான டெல்லி குடிமக்களின் தன்னிச்சையான, அமைதியான மற்றும் நல்ல நகைச்சுவையான அதிருப்தி வெளிப்பாடாகும் என தெரிவித்தது.

மேலும், திபெத்திய குடிமக்கள் நான்கு பேர் இந்திய வீரர்களால் கடத்தப்பட்டதாக சீனா புகாரில் குற்றம் சாட்டியிருந்தது. அதற்கு இந்தியா, “மற்ற திபெத்திய அகதிகளைப் போலவே இந்த நான்கு பேரும் தங்கள் விருப்பப்படி இந்தியாவுக்கு வந்து எங்கள் அனுமதியின்றி இந்தியாவில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்கள் விரும்பினால் எந்த நேரத்திலும் திபெத்துக்கு செல்ல அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது” என்று பதிலளித்திருந்தது.

அப்போது சீன அதிகாரிகளின் கண்களில் இருந்து தப்பித்து இந்தியாவுக்குள் வந்த இரண்டு திபெத்திய பெண்கள் விவகாரத்தில் சீனா கடும் கோபம் கொண்டிருந்தது. அவர்கள் இந்தியாவில் உள்ள காவல் நிலையத்தை அணுகி சீன அதிகாரிகள் மற்றும் வீரர்கள் செய்த அட்டூழியங்கள் குறித்து புகார் தெரிவித்தனர். இந்தியாவில் தஞ்சம் கோரிய இந்த பெண்கள் மற்றும் வேறு சில திபெத்தியர்களை தங்களிடம் ஒப்படைக்க சீனா விரும்பியது.

ஆடுகளை திருடியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில் அளிக்கையில், 59 காட்டெருமைகள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், செம்மறி ஆடுகளைப் பொறுத்தவரையில் அதற்கு உரிமையாளரான இரண்டு மேய்ப்பர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பி செல்ல விரும்பினால் திபெத்துக்கு அழைத்து செல்லலாம். ” என தெரிவித்தது.

சீனாவை, வாஜ்பாய் கேலி செய்த முழு அத்தியாயமும் அப்போது பெரிதும் பேசும் பொருளானது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவுக்கு பாடம் “கற்பிக்க” வந்த சீனாவை இரத்தக்களரி மூக்குடன் திருப்பி அனுப்பியது. சீனாவிற்கு 1967 போரில் இந்தியா சரியான பாடத்தை கற்பித்ததுடன், எல்லையில் அமைதியை உறுதி செய்தது.