இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்… ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறிவைக்கிறது சீனா… எப்படி…?

Read Time:4 Minute, 54 Second
Page Visited: 6150
இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்… ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறிவைக்கிறது சீனா… எப்படி…?

இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. லடாக்கில் சீனா வாலாட்டியது. இதைத்தொடர்ந்து, மேற்கு எல்லையான பாகிஸ்தான் எல்லை பகுதியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அமைதியை சீர்குலைக்க விரும்பும் பாகிஸ்தான் சீனா ஊற்றும் தேனுக்கு ஆசைப்பட்டு மயங்கி கிடக்கிறது. இதற்கான விளைவு கண்டிப்பாக அந்நாட்டுக்கு இருக்கும். பாஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்துகிறது.

பாகிஸ்தான் சாலைகள் அமைக்க சீனா உதவி வருகிறது. அந்த பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை சீனா கையில் எடுத்து உள்ளது. அதை சாக்காக வைத்து உள்நுழைந்த சீனா அங்கு விமான நிலையம், ரெயில் பாதை, சாலை ஆகியவற்றை அமைக்க உதவி வருகிறது. சீனா பாகிஸ்தானுக்கு போர் தளவாடங்கள் மற்றும் விமானங்களை கொடுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொடுக்கும்போது, சீனாவும் தன்னை ராணுவரீதியாக அப்பகுதியில் பலப்படுத்த முயற்சிக்கிறது.

ஏற்கனவே, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அவ்வழியாக செல்கிறது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் சீனா ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்து இருக்கிறது. தனது நிறுவனங்களின் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு சொந்த பிராந்தியத்தையே உருவாக்கி உள்ளது சீனா. அங்கு பாகிஸ்தானியர்கள் கூட அனுமதியின்றி நுழைய முடியாது என்ற நிலையே ஏற்பட்டு இருக்கிறது.

எல்லை பகுதியில் கட்டுமான பணியில் 30 சீன நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. அத்துடன், ராஜஸ்தான் எல்லையில் சீன நிறுவனங்கள் எண்ணெய் அகழாய்வு பணியில் ஈடுபட்டு இருக்கின்றன. சுமார் 2 ஆயிரத்து 500 சீன நிபுணர்கள் இப்பணியை செய்து வருகின்றனர் என தெரியவந்து உள்ளது. சீன அரசின் தேசிய என்ஜினீயரிங் நிறுவனம் உள்பட பெரிய நிறுவனங்கள், எல்லையை ஆக்கிரமித்து உள்ளன. ராஜஸ்தான் எல்லைக்கு 8 கி.மீ. தூரத்திலேயே எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு இருக்கின்றன.

அங்கு சுமார் 50 எண்ணெய் கிணறுகள், சீன நிபுணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்குள்ள பள்ளிகளில் சீனாவின் மண்டாரின் மொழி கற்பிக்கப்படுவதாக இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்ற சைலேஷ் ராய் கூறியிருக்கிறார். அங்கு பாதுகாப்பு பொறுப்பை சீன ராணுவமே கவனிக்கிறது. இதனால், எல்லை பாதுகாப்பு படை உஷாராக இருப்பதாக அதன் ஐ.ஜி. அமித் லோதா தெரிவித்தார். மத்திய அரசு, தனது முழு கவனத்தையும் ராஜஸ்தான் எல்லைப்பக்கம் திருப்ப வேண்டும் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் யோசனை தெரிவித்து உள்ளனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
100 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %