இந்தியாவில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு புதிய மருந்து… மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்…

Read Time:2 Minute, 14 Second

கொரோனா வைரஸ் தொற்று எதிராக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகளாவிய மருத்துவ விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களது உயிர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக விஞ்ஞானிகள் ஏற்கனவே பிற நோய்களுக்கு தந்து உபயோகத்தில் இருக்கிற மருந்துகளையும் தந்து சோதித்து வருகின்றன.

இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு தரப்படுகிற ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் நோயாளிகளுக்கு தரலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதேபோன்று வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்தையும் கொரோனா நோயாளிகளுக்கு தரலாம் என கடந்த 13-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.

இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அல்லது அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கும் வகையிலானது.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு மிதமாக இருக்கிற சூழலில் நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையில் புதிய மருந்தாக டெக்ஸாமெத்தாசோனியும் மத்திய சுகாதார துறை சேர்த்து இருக்கிறது. இந்த மருந்து மலிவானது. இம்மருந்து இந்தியாவில் நுரையீரல் தொற்று நோய்களுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை மிதமான மற்றும் நோய் தீவிரமான நிலையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.