இந்திய ராணுவத்திற்கு வெற்றி… ஹிஸ்புல் முஜாகிதீன் முக்கிய தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை ‘பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமானது காஷ்மீரின் ‘தோடா’…!

Read Time:3 Minute, 55 Second
Page Visited: 1011
இந்திய ராணுவத்திற்கு வெற்றி… ஹிஸ்புல் முஜாகிதீன் முக்கிய தளபதி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை ‘பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமானது காஷ்மீரின் ‘தோடா’…!

காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் சதித்திட்டத்தின்படி செயல்படும் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் வேட்டையாடி வருகிறது.

கடந்த சில வருடங்களாக காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்கும் பணியானது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எல்லையில் ஊடுவும் பயங்கரவாதிகள், உள்ளே செயல்படும் பயங்கரவாதிகளையும் இந்தியப் படைகள் வேட்டையாடி வருகிறது. இப்பணியில் இந்திய ராணுவத்துக்கு முக்கிய வெற்றியாக காஷ்மீரில் ஒரு மாவட்டம் பயங்கரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியிருக்கிறது.

இதன் விபரம்:-

தெற்கு காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டம் குல் சோகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்த தகவலையடுத்து அப்பகுதியை பாதுகாப்புப் படையினர், ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவினர், போலீஸார் ஆகியோர் சேர்ந்து சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கியிருந்த பயங்கரவதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.


இதற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் இருவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் என்றும் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி மசூத் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கொல்லப்பட்ட மசூத் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டவன் மற்றும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவன் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது மசூத்தை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படைக்கு மிகப்பெரிய வெற்றியாகியுள்ளது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம் தற்போது தீவிரவாதிகள் இல்லாத மாவட்டமாக மாறியிருக்கிறது. தோடா மாவட்டத்தில் இருந்த கடைசி பயங்கரவாதி மசூத் மட்டுமே, அவனும் தற்போது வேட்டையாடப்பட்டான். இந்த ஆண்டில் 100 அதிகமான பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் பெரும்பாலும் தெற்கு காஷ்மீரை சேர்ந்தவர்கள் என அம்மாநில காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

தெற்கு காஷ்மீரில் 29 வெளிநாட்டு பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர், அவர்களையும் வேட்டையாடுவோம் என அம்மாநில காவல்துறை ஐஜிபி விஜய்குமார் தெரிவித்து இருக்கிறார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %