கூகுள் ப்ளே, ஆப்பிள் ஸ்டோரிலிருந்து 59 செயலிகளுக்கும் நீக்கம்..! இந்தியா தடை விதித்தது ‘கவலையளிக்கிறது’ – சீனா

Read Time:2 Minute, 27 Second

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது.

‘டிக் டாக்’, ‘வி சாட்’ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து ‘டிக்டாக்’ செயலி அதிகாரப்பூர்வமாக இன்று நீக்கப்பட்டு உள்ளது.

லடாக் மோதலை அடுத்து சீனப் பொருட்களை நிராகரிப்போம் என்ற கோரிக்கையானது இந்தியா முழுவதும் அதிகரித்து உள்ளது. அதற்கு ஆதரவும் ஒருதரப்பில் பெருகிவருகிறது. இதற்கிடையே ‘டிக் டாக்’ உள்ளிட்ட சீன செயலிகளை தடை செய்ய வேண்டும் என இந்தியாவில் கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த தடை விதித்து குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெரும்பான்மை ஆதரவைக்கொண்டிருக்கும் இந்த செயலிகளுக்கு தடையென்பது சீன நிறுவனங்களுக்கு சரியான அடிமட்டுமல்ல, தொழில்நுட்பம் வாயிலான வருவாயும் அந்நாட்டுக்கு குறையும். பொருளாதார ரீதியில் இந்தியாவில் சீன பொருட்கள் நிராகரிப்பு அந்நாட்டுக்கு பெரும் அடியாக அமையும் என்பதில் மாற்றமில்லை.

எல்லை மோதலில் அடாவடியில் ஈடுபட்ட சீனாவிற்கு ஆன் -லைனிலும் இந்தியா அடியை கொடுத்து இருக்கிறது.

இந்திய சீன செயலிகளுக்கு தடை விதித்ததற்கு சீனா கடும் கவலையை தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பேசுகையில், “ சீனா இவ்விவகாரத்தில் அதிகம் அக்கறை கொண்டுள்ளது, நாங்கள் நிலைமையை சரிபார்க்கிறோம்” கூறியிருக்கிறார். சீன வணிகங்களின் உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.