பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது…

Read Time:3 Minute, 44 Second
Page Visited: 239
பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது…

நூற்றாண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால், பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதற்காக ரூ.250 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் பூமி பூஜையுடன் பணி தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பாம்பன் பகுதியில் 2 மாதமாக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு, தொடர்ந்து பெய்த மழை ஆகியவற்றால் பாம்பனில் புதிய ரெயில் பாலத்திற்கான பணிகள் நடைபெறவில்லை.

தற்போதுகடல் கொந்தளிப்பும் குறைந்ததால் பாம்பன் கடல் பகுதியில் புதிய ரெயில் பாலத்திற்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்தது. பாம்பன் வடக்கு பகுதியில் பழைய ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள பகுதியல் புதிய ரெயில் பாலத்திற்காக தூண்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. அதற்காக கடற்கரை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சமதளப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரி பேசுகையில், புதிய ரெயில் பாலத்தின் பணிகளுக்காக ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள வடக்கு கடற்கரை பகுதியில் புதிய பாலத்திற்காக முதல் தூண்கள் கட்டுவதற்காக கடற்கரை பகுதியில் அதிவேக எந்திரம் மூலம் 30 மீட்டர் ஆழம் வரையிலும் தோண்டப்பட்டு தூண்கள் கட்டப்பட உள்ளன. கடலில் தோண்டி ஆழப்படுத்தி தூண்கள் அமைக்க 5 எந்திரங்கள் ஈடுத்தப்பட உள்ளன.

புதிய பாலத்திற்காக மொத்தம் 330 தூண்கள் கட்டப்பட உள்ளன. ஒரே நேரத்தில் 2 ரெயில்கள் செல்லும் வகையில் இருவழிப்பாதை பாலமாகவே கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரெயில் பாலத்தின் மைய பகுதியில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் கண்காணிப்பு கேமரா மற்றும் தொலைதொடர்பு வசதிகளுடன் கூடிய தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது என்று தெரிவித்து இருந்தார்.

தற்போது, புதிய பாலத்திற்கான முதல் தூணை கட்டமைக்கும் பணியை இந்தியன் ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. அகில இந்திய அளவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை அதிகம் வருகை தருகின்றனர். ராமேசுவரம் புனித பயணம் மேற்கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில் பயணம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இவ்விவகாரத்தில் மத்திய அரசின் செயல்திட்டம் விரைந்து முடிய ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %