வடக்கு லடாக்கில் பாகிஸ்தானிய படைகள் நகர்வு… இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் சீனா பேச்சுவார்த்தை… அதிர்ச்சி தகவல் விபரம்:-

Read Time:3 Minute, 9 Second

இந்தியா – சீனா இடையே எல்லையில் மோதல் போக்கு காணப்படுகிறது.

எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், படைகளை வாபஸ் பெறவும் இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது ஒருபுறம் சென்றாலும், மற்றொரு புறம் சீனாவை எதிர்க்கொள்ளும் வகையில் படைகளை இந்தியா எல்லையில் குவித்து வருகிறது.

இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலாக பாகிஸ்தான் ராணுவமும் எல்லையை நோக்கி படைகளை நகர்த்துகிறது என்பது தெரியவந்து இருக்கிறது. பாகிஸ்தான் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் படைகளை நகர்த்த தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஜம்மு-காஷ்மீரில் வன்முறையை தூண்டும் வகையில் தாக்குதல்களை நடத்த சீன இராணுவம் பயங்கரவாத அமைப்பான அல் பத்ருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடக்கு லடாக் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 20,000 கூடுதல் படைகளை பாகிஸ்தான் நகர்த்தியுள்ளது.

இந்தியா மீதான இருமுனை தாக்குதல் வாய்ப்பை பயன்படுத்த பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. இதற்கிடையில், இந்திய இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே தொடர்ச்சியான சந்திப்புகள் நடந்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சீனாவால் தூண்டப்பட்டுள்ளது. அதாவது, போரை கடினப்படுத்த இந்தியாவிற்கு பயங்கரவாதிகளை அனுப்புவது போன்ற சதிதிட்டங்களை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

காஷ்மீருக்குள் கிட்டத்தட்ட 100 பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒருநாச வேலையை மேற்கொள்ள திட்டம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் உயர்மட்ட உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் 120-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை வேட்டையாடி பாதுகாப்பு படைகள் சமீபத்திய வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் உள்ளூர்வாசிகள். சிலரே வெளிநாட்டு பயங்கரவாதிகள். காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரை தாக்கி இந்தியாவில் உள் நாசவேலை செய்ய பாகிஸ்தான் முயற்சிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
100 %
Surprise
Surprise
0 %