இந்தியாவை விட விரும்பாத ‘டிக் டாக்’ அரசின் தடை உத்தரவுக்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு!

Read Time:3 Minute, 31 Second
Page Visited: 296
இந்தியாவை விட விரும்பாத ‘டிக் டாக்’ அரசின் தடை உத்தரவுக்கு கட்டுப்படுவதாக  அறிவிப்பு!

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உள்ளது.

இதில் முக்கியமான நிறுவனமாக டிக் டாக்கின் செயலியும் தடையில் சிக்கியிருக்கிறது. உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்தவர்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர். செயலியை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதனால் கிடைக்கும் வருவாயும் இந்தியாவில் தான் அதிகமாகும். ஏற்கனவே பாலியல் புகார் தொடர்பாக கடந்த ஆண்டு டிக் டாக் இந்தியாவில் தடையை சந்தித்தது. அப்போது 115 கோடி வரையில் வருவாய் இழப்பதாக டிக் டாக் நிறுவனம் தெரிவித்தது.

டிக்டாக் நிறுவனத்திற்கு இந்தியா தான் மிகப்பெரிய மார்க்கெட்டாக இருக்கிறது. அமெரிக்கா, சீனாவில் கூட அவ்வளவு பயன்பாடு கிடையாது.

இந்நிலையில் இந்தியாவில் தடையென்பது அச்செயலிக்கான உலகில் மிகவும் முக்கியமான மார்க்கெட்டை இழப்பதாகும். ஆனால், அது நடக்க அந்நிறுவனம் விரும்பவில்லை.

இந்திய அரசின் தடை உத்தரவுக்கு கட்டுப்படுவதாக அறிவித்து இருக்கிறது

இதுகுறித்து ‘டிக் டாக்’ இந்தியா கிளையின் தலைவர் நிகில் காந்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக்டாக் செயலி 14 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. கோடிக்கணக்கானோர் அதனை பயன்படுத்தி வருகிறார்கள். கலைஞர்கள், கதை சொல்பவர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு ‘டிக் டாக்‘கை சார்ந்து இருக்கின்றனர்.

இவர்களில் பலர் முதல்முறையாக இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் ஆவர்.

இந்நிலையில் டிக் டாக் உள்பட 59 செயலிகளுக்கு தடை விதித்து இந்திய அரசு இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவுக்கு கட்டுப்படும் நடைமுறைகளை செய்து வருகிறோம். எங்கள் தரப்பு விளக்கத்தை அரசுத்தரப்பிடம் அளிக்க எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய சட்டங்களின் கீழ், பயனர்களின் அந்தரங்க தகவல்களுக்கும், பாதுகாப்புக்கும் ‘டிக் டாக்‘ முக்கியத்துவம் அளிக்கிறது. பயனர்களின் தகவல்களை சீன அரசு உள்பட எந்த அரசிடமும் பகிர்ந்து கொண்டது கிடையாது. எதிர்காலத்தில் கேட்டாலும், பகிரப்போவது கிடையாது. பயனர்களின் அந்தரங்கத்துக்கும், கண்ணியத்துக்கும் ‘டிக் டாக்‘ உயர் முக்கியத்துவம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %