புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவல்… சீனாவுடன் ஒத்துழைப்பை நாடுகிறது உலக சுகாதார அமைப்பு

Read Time:3 Minute, 18 Second
Page Visited: 271
புதிய பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவல்… சீனாவுடன் ஒத்துழைப்பை நாடுகிறது உலக சுகாதார அமைப்பு

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்னும் உலகம் விடுபட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் உலக நாடுகள் இந்த வைரசின் பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிக்கிறது.

இந்த வைரஸ் தொற்று தொடர்பான தகவல்களை சீனா முதலிலே வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதனால்தான் மிகப்பெரிய விளைவுகள் நேரிட்டுள்ளதாக உலக நாடுகளின் குற்றச்சாட்டு நிலவுகின்றன.

இந்நிலையில், சீனாவில் ‘ஜி4 இஏ எச்1என்1’ என்ற புதிய வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி மீண்டும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வைரஸ், பன்றிகளிடையே பரவி மனிதர்களையும் தாக்கலாம். வைரசை பொறுத்தமட்டில் உடனடியாக மனிதர்களை தாக்கும் ஆபத்து இல்லை. ஆனால், இது கொரோனா வைரஸ் தொற்று போல மாறும் அச்சுறுத்தல் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அதிர்ச்சிகரமான தகவலாக இதுவும் புதிய வைரசாக இருப்பதால் இதற்கு எதிரான நோய் எதிர்ப்புச்சக்தி மனிதர்களுக்கு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸ் பற்றிய கூடுதல் தகவல்களை பெறவும், ஒருங்கிணைந்து செயல்படவும் சீனாவை உலக சுகாதார நிறுவனம் நாடியிருக்கிறது. இதுதொடர்பக உலக சுகாதார நிறுவனத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் தாகேஷி கசாய் பேசுகையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள புதிய வைரஸ், பன்றிக்காய்ச்சல் வைரசின் திரிபு என கூறப்படுவதால், இது தொற்று நோயாக மாறுகிற அபாயங்கள் இருக்கிறது. இதுப்பற்றி மதிப்பிடுவதற்கு சீனாவின் ஒருங்கிணைப்பை உலக சுகாதார நிறுவனம் நாடியிருக்கிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் நிலைமையை மதிப்பிடுவதற்கு போதுமானதாக இல்லை. இந்த புதிய நிகழ்வில் சரியான இடர் மதிப்பீட்டை நாங்கள் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு சீன அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் விரும்புகிறோம். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டமைக்கப்பட்ட திறனை, எதிர்காலத்தில் இன்புளூவென்சா தொற்று நோய்களுக்கு தீர்வு காண்பதற்கும் பயன்படுத்த முடியும் எனக் கூறியிருக்கிறார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %