சீனாவுடன் மோதல்: ‘பினாகா, அஸ்த்ரா ஏவுகணைகள்…’ முப்படைக்கு ரூ. 39 ஆயிரம் கோடியில் போர் தளவாடங்கள் இந்தியா வாங்குகிறது…

Read Time:3 Minute, 48 Second
Page Visited: 258
சீனாவுடன் மோதல்: ‘பினாகா, அஸ்த்ரா ஏவுகணைகள்…’ முப்படைக்கு ரூ. 39 ஆயிரம் கோடியில் போர் தளவாடங்கள் இந்தியா வாங்குகிறது…

லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே சுமார் 2 மாதங்களாக மோதல் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் 15ம் தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. எல்லையில் இந்தியாவும் கண்காணிப்பை அதிகரித்து படைகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் முப்படைகளுக்கும் போர் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கமிட்டி நேற்று (ஜூலை 2) கூடி ஆலோசனையை நடத்தியது.

இதில் முப்படையினருக்கு ரூ.38,900 கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.


  • ரஷியாவிடம் இருந்து 21 மிக்-29எஸ் தாக்குதல் ரக விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 12 சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 59 மிக்-29 ரக விமானங்களை மேம்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
  • இதைப்போல 248 அஸ்த்ரா ஏவுகணை அமைப்புகள் மற்றும் பினாகா ஏவுகணை அமைப்புகள், நீண்டதூரம் குறிப்பாக 1000 கி.மீ. தொலைவில் உள்ள தரை இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போதைய பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டும், நமது எல்லைகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு படையை பலப்படுத்துவதற்காகவும் இந்த ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பினாகா, அஸ்த்ரா ஏவுகணை அமைப்புகளால் கடற்படை, விமானப்படைகள் மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் ரூ.38,900 கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்கும் நிலையில், இதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொகைக்கு குறிப்பாக ரூ.31,130 கோடிக்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்தே ஆயுதங்கள் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %